Breaking News

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயணச்சலுகை வழங்கும் திட்டம் - சிறப்பு முகாம்

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2022 - 2023 - ம் நிதியாண்டிற்கு முதன் முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயணச்சலுகை வழங்கும் திட்டத்தின் கீழ் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு காஞ்சிபுரம் மாவட்டம் / சென்னை மாவட்டம் முழுவதும், மற்ற அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளில்  கல்வி பயில்பவர்கள்,  பணிக்கு செல்பவர்கள் மற்றும் மருத்துவ சிகிச்சையின் பொருட்டு செல்பவர்களுக்கு இலவச பயணச்சலுகை வழங்கிட சிறப்பு முகாம்கள் கீழ்க்குறிப்பிட்டவாறு நடைபெறவுள்ளது.

25.3.2022 அன்று காலை 10.00 மணி முதல் 1.00 வரை அரசு சேக்கிழார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, குன்றத்தூர்லும், 01.04.2022  காலை 10.00 மணி முதல் 1.00 வரை மக்கள் நல்லுறவு மையம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், காஞ்சிபுரத்திலும் நடைபெறவுள்ளது.


இம்முகாமிற்கு வரும் மாற்றுத்திறனாளிகள் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை அசல் மற்றும்  இரண்டு நகல்கள் , பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் - 3, பணிபுரிவதற்கான சான்று / கல்வி பயில்வதற்கான சான்று / மருத்துவ சிகிச்சை பெறுவதற்கான சான்று, தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டையின் இரண்டு நகல்கள் (UDID), ஆதார் அட்டை நகல்கள் ஆகியவற்றுடன் மேற்குறிப்பிட்ட  முகாமில் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் டாக்டர் மா.ஆர்த்தி,இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.

வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம்.

No comments

Thank you for your comments