Breaking News

வாக்காளர் விழிப்புணர்வு போட்டிகள் அறிவிப்பு

இந்திய தேர்தல் ஆணையம், ஒவ்வொரு வாக்கின் முக்கியத்துவத்தையும், 100 சதவீதம் வாக்களிப்பதையும் வலியுறுத்துவதற்காக “எனது வாக்கு எனது எதிர்காலம்” ஒரு வாக்கின் வலிமை என்ற கருப்பொருளை மையமாகக்கொண்டு தேசிய அளவில் வாக்காளர் விழிப்புணர்வு போட்டிகள் அனைத்து தரப்பு மக்களும் மற்றும் அனைத்து வயதினரும் பங்குபெறும் வகையில்  https://voterawarenesscontest.in/  என்ற இணையதளம் மூலமாக ஆன்லைனில் நடத்தி வருகிறது.

மேற்படி போட்டிகளில் கலந்து கொள்வதற்கு மார்ச் 31-ம் தேதி வரை கால நீடிப்பு செய்து இந்திய மக்களின் தனித் திறமைகள் மற்றும் மக்களின் பெரும் பங்களிப்பினை உறுதி செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

எனவே இப்போட்டிகளில் பங்கேற்போர் போட்டியின் விரிவான வழிகாட்டுதல்கள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளையும் https://ecisveep.nic.in/contest/ என்ற வலைத்தளத்தில் பார்வையிடலாம் என்றும், பங்கேற்பாளர்கள் போட்டிகள் தொடர்பான பதிவுகள் மற்றும் அதனுடைய விவரங்களை voter-contest@eci.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மார்ச் 31-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

அதிகாரப்பூர்வ இணையதளம் https://voterawarenesscontest.in/

No comments

Thank you for your comments