Breaking News

விலையில்லா தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம்

கோவை, மார்ச் 1-

மின்மோட்டாருடன் கூடிய விலையில்லா தையல் இயந்திரம் பெற சிறுபான்மையினர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

2021-2022ம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கையில், சிறுபான்மையின சமூகத்தைச் சேர்ந்த மக்களின் பொருளாதார நிலையில் திட்டமிடப்பட்ட உறுதியான  முன்னேற்றத்தை அடைவதற்காகவும், அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும் விலையில்லா மின்மோட்டாருடன்  கூடிய தையல் இயந்திரம் வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.

எனவே கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிறுபான்மையின சமூதாயத்தைச் சார்ந்த இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், புத்த மத்தினர், பார்சிகள் மற்றும் ஜெயின் இனத்தைச் சார்ந்த பயனாளிகள், மின் மோட்டாருடன் கூடிய விலையில்லா தையல் இயந்திரம் பெற தகுதிகள்  கீழ்க்கண்டவாறு தகுதிகள் நிர்ணயிக்கப்டடுள்ளது.

1. தையல் கலை பயின்றவராக இருத்தல் வேண்டும் மற்றும் தையல் கலை பயின்றதற்கான உரிய சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

2. ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.1 லட்சமாக இருத்தல் வேண்டும்.

3. வயது வரம்பு 20 முதல் 45 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.

4. கைம்பெண் மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர் போன்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர், கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  இரண்டாம் தளத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் (தொலைபேசி எண்.0422-2300404) மேற்கண்ட சான்றுகளுடன் விண்ணப்பம் அளித்து பயன் பெறலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.


No comments

Thank you for your comments