தெங்குமரஹடா கிராமம் கருத்துக் கேட்புக் கூட்டம் அறிவிப்பு - தேதி 06.03.2022
ஈரோடு, மார்ச் 1-
சென்னை உயர்நீதி மன்றத்தின் உத்தரவின்படி, நீலகிரி மாவட்டம், நீலிகிரி வனக்கோட்டத்தின் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமைந்துள்ள தெங்குமரஹடா கிராமத்தில் வசிக்கும் மக்களை, சத்தியமங்கலம் மற்றும் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு வெளியே இடமாற்றம் செய்வது குறித்து, தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் கள இயக்குநர், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் அவர்களது தலைமையில், ஈரோடு, கோவை மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர்கள், கள இயக்குநர், முதுமலை புலிகள் காப்பகம், உதகமண்டலம், மாவட்ட வன அலவலர், கோவை மற்றும் நீலகிரி ஆகிய அதிகாரிகள் உள்ளடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டு, தெங்குமரஹடா கிராமத்தில் வசிக்கும் அனைத்து கிராம மக்களையும் 06.03.2022 அன்று சந்தித்து, அப்பகுதியில் தங்களது குடியிருப்பு தொடர்பாக சட்ட ரீதியான நிலையினை எடுத்துறைக்கவும், அது குறித்து அவர்களது கருத்துக்களை அறிந்து உறுதி செய்யுமாறு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இக்குழுக் கூட்டம் வருகின்ற 06.03.2022 அன்று தெங்குமரஹடா கிராமத்தில் காலை 10.30 மணியளவில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் தெங்குமரஹடா கிராம மக்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவிக்குமாறு துணை இயக்குநர், சத்தியமங்கலம் வனக்கோட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் அவர்கள் தெரிவித்துள்ளார்.
No comments
Thank you for your comments