75வது சுதந்திர அமுத பெருவிழா கண்காட்சி... திறந்து வைத்தார் அமைச்சர் அன்பரசன்
காஞ்சிபுரத்தில் பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நினைவு பூங்காவில் 75வது சுதந்திர அமுத பெருவிழா கண்காட்சியை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார்.
செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா நிறைவு பூங்கா அருகில் 75-வது சுதந்திர தின விழா - சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா" பல்துறை பணி விளக்க கண்காட்சியினை மாண்புமிகு குறு. சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் தொடங்கி வைத்து, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி,இ.ஆ.ப, சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.க.சுந்தர்(உத்திரமேரூர்) மற்றும் திரு.சி.வி.எம்.பி.எழிலரசன்(காஞ்சிபுரம்) ஆகியோருடன் அமைக்கப்பட்டிருந்த பல்துறை பணி விளக்க கண்காட்சியினை பார்வையிட்டார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, 75 வது சுதந்திர தின பவள விழாவினையொட்டி, வீரத் தியாகிகளின் வீர பெருமிதங்களை நினைவுகூர்ந்து போற்றும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் "சுதந்திரத் திருநாள் அமுதப்பெருவிழா" நடத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் 75-வது சுதந்திர தின விழா "சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா" இன்று 22.03.2022 தொடங்கி வைக்கப்பட்டு, 28.03.2022 வரை ஒரு வாரம் சிறப்பாக நடைபெறவுள்ளது.
இதில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் மூலம் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரலாறு குறித்த புகைப்படக் கண்காட்சி, வேளாண்மை துறையால் பாரம்பரிய நெல் கண்காட்சி மற்றும் விவசாயிகளுக்கான அரசின் வேளாண் திட்டங்கள் குறித்த கண்காட்சி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் மூலம் பாரம்பரிய ஊட்டச்சத்து நிறைந்த இயற்கை உணவு தயாரிக்கும் முறைகள் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், மாவட்ட தொழில் மையம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, கால்நடை பராமரிப்பு துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, பேரூராட்சிகள், சுற்றுலா துறை போன்ற பல்வேறு துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட அரங்குகளில் துறை சார்ந்த நலத்திட்ட உதவிகள், திட்டங்கள் குறித்த விளக்க கண்காட்சிகள் பொதுமக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மாணவ/மாணவியர்களின் பரதநாட்டியம், யோகா, சிலம்பம், பாரத திருநாட்டிற்காக இன்னுயிர் நீத்த தியாகிகளின் நினைவை போற்றும் நாடகம் மற்றும் மேடை பேச்சு நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சி நடைபெறும் அனைத்து நாட்களிலும் மாலை நேரங்களில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது.
இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளர்-உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர், மாணவரணி செயலாளர்-காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், நகர திமுக செயலாளர் சன்பிராண்ட் கே.ஆறுமுகம், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் நித்யா சுகுமார், துணை மேயர் குமரகுருநாதன், மாநகர மன்ற உறுப்பினர்கள் சரஸ்வதி பாலமுருகன், குமரவேல், தேவராஜ்,மாநில வர்த்தகர் அணி துணை செயலாளர் வி.எஸ். இராமகிருஷ்ணன், உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், திமுகவினர் கலந்து கொண்டனர்.
இக்கண்காட்சியை பொது மக்கள் குடும்பம் குடும்பமாக வந்து கண்டுகளித்தனர்.
No comments
Thank you for your comments