Breaking News

வழிப்பறி செய்த நபர்களை துரிதமாக பிடித்த மு.நி.காவலர் அழகிரிசாமி

கோவை, மார்ச் 8-

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவில்பாளையம் பகுதியில் உள்ள தனியார் டெக்ஸ்டைல் நிறுவனத்தில் வேலை பார்க்கும் தனது மனைவியை பார்ப்பதற்காக  மதுரை மேலூர் பகுதியைச் சேர்ந்த சோமசுந்தரம்(39) என்பவர் கோவில்பாளையத்தியத்தில் உள்ள  தனியார் பேங்க் அருகே நடந்து வந்து கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று நபர்கள் சோமசுந்தரத்தை(39) அடித்து கீழே தள்ளி விட்டு அவரிடம் இருந்த கைபேசியை பறித்துச் சென்றுள்ளனர். 

இது சம்பந்தமாக சோமசுந்தரம்(39) கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன் அடிப்படையில் அப்பகுதியில்  ஆல்ஃபா வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மு. நி. காவலர் அழகிரிசாமி என்பவருக்கு காவல் நிலையத்தில் இருந்து தகவல் கொடுத்தனர். 

அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்குள்ள பொதுமக்களிடம் விசாரித்து அவர்கள் கூறிய தகவலை அடிப்படையாகக் கொண்டு துரிதமாக செயல்பட்டு உடனே முதல் நிலை காவலர் காலதாமதமின்றி உடனடியாக வெகுதூரம் சென்றிருக்க முடியாது என யூகித்து சுமார் 1 1/2 கிலோமீட்டர் பின் தொடர்ந்து சென்று செல்போனை பறித்து சென்ற  மூன்று நபர்களையும் அங்குள்ள பொதுமக்கள் உதவியுடன் கையும் களவுமாக பிடித்தும் , நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். இவ்வாறு துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த மு.நி.காவலர் திரு. அழகிரிசாமி (1319) என்பவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . செல்வநாகரத்தினம் இ.கா.ப , மாவட்ட காவல் அலுவலகத்தில் பாராட்டி, பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.



No comments

Thank you for your comments