Breaking News

ஆவடி மாநகராட்சி மேயர் பதவியை வெல்லப்போவது பணமா? உழைப்பா?

திருவள்ளூர், மார்ச் 3-

திருவள்ளூர் மாவட்டம் தற்போது நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலில் முதன்முறையாக நகராட்சியாக இருந்த ஆவடி தற்போது மாநகராட்சியாக அறிவித்து முதற்கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சந்தித்தது. 


இந்த ஆவடி மாநகராட்சியில் மொத்தம் 48 வார்டுகள் அமைந்துள்ளது. தற்போது திமுகவும் அதிமுகவும் மற்றும் நாம் தமிழர் சுயேட்சை உள்ளிட்ட கட்சிகளும் போட்டியிட்டனர் இதில் திமுக கூட்டணி களோடு இணைந்து 43 இடங்களிலும் அதிமுக 4 இடங்களிலும் சுயேட்சை ஒரு இடங்களிலும் வெற்றி பெற்றது.



இதைத் தொடர்ந்து இந்த மாநகராட்சியில் மேயர் மற்றும் துணை மேயர் இவர்களுக்கு மறைமுக தேர்தல் நடத்த திட்டமிட்டிருந்தனர். அதனடிப்படையில் வெற்றி பெற்ற 48 வேட்பாளர்களும் நேற்று (2.3.2022) பதவி பிரமாணம் செய்துகொண்டனர் இதில் அதிமுக சார்பாக போட்டியிட்ட ராஜேஷ் என்பவர் 16 வது வார்டில் வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற கையோடு திமுகவில் இணைந்தார்.

 திமுகவில் 20 ஆண்டுகளுக்கு மேல் உழைத்து வந்த பட்டின இனத்தை சேர்ந்த வீர பாண்டியன் என்பவர் 21வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் பெயர் மேயர் பதவிக்காக திமுகவினர் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது திடீரென்று அதிமுகவில் வெற்றி பெற்று திமுகவில் சேர்ந்த ராஜேஷ் அவர்களுக்கு மேயர் பதவி வழங்குவதாக பால்வளத் துறை அமைச்சர் சா.முநாசர் கூறியதாக திமுக கட்சியினரிடையே சலசலப்பு நிலவி வருகிறது. 

20 ஆண்டுகளுக்கு மேல் திமுக கட்சியில் உழைத்து வந்த வீரபாண்டியனுக்கு கொடுக்காமலா  நேற்று திடீரென்று திமுகவில் சேர்ந்த ராஜேஷ்க்கு மேயர் பதவியா.. பணமா? 20 ஆண்டுக்காலம் உழைப்பா? பொறுத்திருந்து பார்ப்போம்


No comments

Thank you for your comments