சுய வேலைவாய்ப்பு கடன் திட்ட விழிப்புணர்வு முகாம்
கோவை, மார்ச் 3-
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பிரத்யோக சுய வேலைவாய்ப்பு கடன் திட்ட விழிப்புணர்வு முகாம் மாவட்ட தொழில் மையம் மூலம் பொள்ளாச்சியில் நடத்தப்படுகிறது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் சுய வேலைவாய்ப்பை உருவாக்கும் பொருட்டு மாவட்ட தொழில் மையம் மூலம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (யூ.ஒய்.ஈ.ஜி.பி), புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (நீட்ஸ்) மற்றும் பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (பி.எம்.இ.ஜி.பி) ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இத்திட்டங்கள் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு பிரத்யோகமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு 04.03.2022 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் பொள்ளாச்சி (வடக்கு) ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
தகுதிவாய்ந்த தொழில் முனைவோர்கள் புகைப்படம், மாற்றுச்சான்றிதழ், சாதிச்சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார் அட்டை மற்றும் விலைப்பட்டியல் ஆகிய ஆவணங்களுடன் வரும்பட்சத்தில் இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பதிவேற்றப்பட்டு கடன் திட்ட விண்ணப்பம் உடனடியாக வங்கிக்கு பரிந்துரை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ஆகவே, புதிய தொழில் துவங்க ஆர்வமுள்ள இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த விழிப்புணர்வு கருத்தரங்கில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.
No comments
Thank you for your comments