Breaking News

இறகு பந்து அரங்கில் மின்னொளி பழுதை சீரமைக்க கோரிக்கை

 காஞ்சிபுரம், மார்ச் 2-

காஞ்சிபுரம் பழைய ரயில்வே சாலையில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கம் வளாகத்திலுள்ள உள் இறகு பந்து அரங்கில் உள்ள மின்னொளிகள் கடந்த 3 மாதங்களாக பழுதடைந்து செயல்படுவதால் அங்கு வரும் இறகு பந்து விளையாட்டு வீரர்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

அவர்கள் இறகு பந்து விளையாடும்போது சில மின்னொளிகள் மட்டும் எறிந்து சில மின்னொளிகள் எறியாத நிலையில் இருப்பதால் இறகு பந்து தெரியாத அவர்களது விளையாட்டு திறனை கைவிடுவதாக அவர்கள் வருத்தமளிக்கின்றனர். 

மாதம் கட்டணம் செலுத்தியும் இது குறித்து பலமுறை அங்குள்ள ஞிஷிளிவிடம் குறை கூறியும் இன்னும் சரிசெய்யவில்லை என அவர்கள் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.எனவே மாவட்ட நிர்வாகமும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறையை சார்ந்த அதிகாரிகள் இதனை விரைவில் சரிசெய்து தரும்படி அவர்கள் பனிவுடன் கோரிக்கை வைக்கின்றனர்.


No comments

Thank you for your comments