4 ஏக்கர் நிலம் வருவாய் துறையினரால் மீட்பு
காஞ்சிபுரம், மார்ச் 2-
4 ஏக்கர் நிலம் வருவாய் துறையினரால் மீட்டனர். அப்போது, பல வருடங்களாக அனுபவித்து வந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து ஜேசிபி வாகனத்தை சிறைபிடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டத்திற்குட்பட்ட தண்டலம் அடுத்த மண்ணூர் கிராமத்தில் சர்வே எண்.429/3 4 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தில் மன்னுர் கிராமத்தைச் சேர்ந்த 1. மனோகரன் 2.பார்த்திபன் 3.வேதமூர்த்தி 4. ஏகாந்தம் குடும்பத்தினர் இரண்டு ஏக்கர் நிலத்தில் உழுது தர்பூசணி விளைச்சல் மேற்கொண்டுள்ளனர்.
மேற்படி நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நெமிலி கிராமம், மேவலுர்குப்பம் கிராமம் மற்றும் செல்லப்பெருமாள் நகரில் வசிக்கும் 44 இருளர் குடும்பங்களுக்கு இலவச பட்டா வழங்க அரசு மூலம் நடவடிக்கை எடுக்க நிலத்திலுள்ள தர்பூசணி செடிகளை அகற்றி மேற்படி நிலத்தை அரசுக்கு உரிமையாக்க ஜேசிபி மூலம் அகற்றும்போது தர்பூசணி பயிரிட்டுள்ள பெண்கள் 10 பேர் ஜேசிபி முன்பு நின்று ஜேசிபி இயங்காத படி பணியினை தடுத்தனர்.
மேலும் அவர்கள் அகற்றுவதற்கு ஆட்சேபனை தெரிவித்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் தலைமையிலான வருவாய் துறையினர் முன்கூட்டியே ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என நோட்டீஸ் அளித்ததால் தொடர்ந்து ஜேசிபி வாகனம் மூலம் 4 ஏக்கர் நிலத்தை மீட்டனர்.
No comments
Thank you for your comments