கொலை குற்றவாளிகள் 4 பேர் கைது
காஞ்சிபுரம், மார்ச் 2-
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சி தாலுக்கா காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கோனேரிக்குப்பம், இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் சேகர் (5 ) த/பெ.பாளையம், என்பவர் கடந்த 25.02.2022 அன்று எதிரிகளால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இதுசம்மந்தமாக காஞ்சி தாலுக்கா காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு எதிரிகளை பிடிக்க காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம்.சுதாகர் அவர்கள் உத்தரவின்பேரில் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் காஞ்சிபுரம் ஜீலியஸ் சீசர் மேற்பார்வையில் வெங்கடேசன், ஆய்வாளர் பாலுசெட்டிசத்திரம் தலைமையில் ஒரு தனிப்படையும் உதவிஆய்வாளர்கள் சிவகுமார், முரளி ஆகியோர் தலைமையில் மாவட்ட தனிப்படையும் என இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டு எதிரிகளை தேடிவந்த நிலையில் நேற்று (01.03.2022 )
1) இளவரசன் (26) த/பெ.கிருஷ்ணன்,
2) சக்தி (எ) சதீஷ்குமார் (23) த/பெ.சங்கர்,
3) அஜித் (25) த/பெ.சங்கர்,
4) ரங்கா (19) த/பெ.பொன்ணன், கோனேரிக்குப்பம்
ஆகியோர்கள் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் எதிரிகளை கைது செய்த தனிப்படையினரை காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.எம்.சுதாகர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.
No comments
Thank you for your comments