Breaking News

மார்ச் 7ம் தேதி முதல் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

 வேலூர்:

வேலூர் மாவட்டம் வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வந்தது. 

பின்னர் கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்ததன் காரணமாக தமிழக அரசின் உத்திரவின்படி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. 

தற்போது கொரோனா நோய் தொற்று பரவல் குறைந்து உள்ளதால் தமிழக அரசின் கொரோனா தடுப்பு நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி திங்கள் தின மக்கள் குறைத்தீர்வு கூட்டம் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. 

எனவே வரும் 07.03.2022 முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காயிதேமில்லத் அரங்கத்தில் திங்கட்கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும். எனவே அனைவரும் தங்களது குறைகளை மனுவாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் வழங்கலாம் என மாவட்ட ஆட்சியர்  பெ.குமாரவேல் பாண்டியன்   தெரிவித்துள்ளார். 

No comments

Thank you for your comments