முன்னாள் படைவீரர்களின் சிறார்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்- கடைசி தேதி 31-03-2022
ஈரோடு, மார்ச் 1-
முன்னாள் படைவீரர்களின் சிறார்கள் பாரத பிரதமரின் கல்வி உதவித்தொகை பெற்றிட விண்ணப்பிக்கலாம் என்று ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.
பாரத பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தின்கீழ் முன்னாள் படைவீரர்கள் தங்களது சிறார்களின் கல்லூரி படிப்புகளுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை பெற்று பயன்பெற்றிடவும், அவ்வாறு பயன்பெறும் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்களின் எண்ணிக்கையை உயர்த்திடும் நோக்கிலும் 2019 - 20 ஆம் கல்வியாண்டு முதல் விண்ணப்பிக்கும் முறையினை எளிமையாக்கியும், வழிமுறைகளை மேம்படுத்தியும் கல்வி உதவித்தொகையினை அதிகரித்தும் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.
2021-22 ஆம் கல்வியாண்டிற்கு PMSS கல்வி உதவித்தொகையினைப் பெற்றிட மேல்நிலைப்படிப்பில் 60% மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியர்கள் பயன்பெறும் வகையில் விண்ணப்பித்திட 01-01-2022 லிருந்து 28-02-2022வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது 31-03-2022 வரைமேலும் காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
எனவே, முன்னாள் படைவீரர்களை சார்ந்த தொழிற்கல்வி பயிலும் சிறார்கள் KSB இணையதளத்தில் பாரத பிரதமரின் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பித்து அதன் நகலினை ஈரோடு மாவட்ட முன்னாள் படைவீரர் நல துணை இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.
மேலும் விவரங்கள் அறிந்திட ஈரோடு மாவட்ட முன்னாள் படைவீரர் நல துணை இயக்குநர் அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசி எண் 0424-2263227 வாயிலாகவோ தொடர்பு கொள்ளுமாறும் தெரிவிக்கப்டுகிறது.
இவ்வாய்ப்பினை முன்னாள் படைவீரர்களின் சிறார்கள் பயன்படுத்திக்கொண்டு 31-03-2022-க்குள் www.ksb.gov.in என்ற KSB இணையதளத்தில் பாரத பிரதமரின் கல்வி உதவித்தொகை பெற்றிட விண்ணப்பித்து பயனடையுமாறு ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.
அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.ksb.gov.in/
No comments
Thank you for your comments