போக்சோ குற்றவாளிக்கு 7 வருட சிறை தண்டனை மற்றும் ரூ. 15 ஆயிரம் அபராதம் விதிப்பு
கோவை :
போக்சோ குற்றவாளிக்கு 7 வருட சிறை தண்டனை மற்றும் ரூ.15,000 அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக கடந்த 2019-ஆம் ஆண்டு துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் அனித் குமார் (21) என்பவர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்தார்.
இவ்வழக்கு கோவை மாவட்டம், போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் விசாரணை முடிவுபெற்று குற்றவாளி அனித்குமாருக்கு 7 வருடம் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 15,000/-அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
இவ்வழக்கினை சிறந்த முறையில் புலன்விசாரணை மேற்கொண்ட புலன்விசாரணை அதிகாரி மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் சிறந்த முறையில் ஆஜர்படுத்திய நீதிமன்ற பெண் காவலர் 664 நிவேதா ஆகியோர்களை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் பாராட்டினார்.
No comments
Thank you for your comments