Breaking News

அமைச்சர் துரைமுருகன் உடல் நலம் குறித்த செய்தி வதந்தியா?

வேலூர்:

தற்பொழுது ஊடகங்களில் ஒரு பொய்ச் செய்தி உலா வந்து கொண்டிருக்கிறது. அந்தச் செய்தி முழுக்க முழுக்க பொய் செய்தியாகும் என்று வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் டி.எம்.கதிர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வேலூர் பாராளுமன்ற உறுப்பினர்  டி.எம்.கதிர் ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

வணக்கம்

தற்பொழுது ஊடகங்களில் ஒரு பொய்ச் செய்தி உலா வந்து கொண்டிருக்கிறது. அந்தச் செய்தி முழுக்க முழுக்க பொய் செய்தியாகும்.

என் தந்தையார் திரு துரைமுருகன் அவர்கள் நல்ல உடல் ஆரோக்கியத்தோடு வீட்டில் இருக்கிறார்.

அவர் எந்த மருத்துவமனையிலும் அனுமதிக்கப்படவில்லை

இந்த பொய் செய்தி ஒரு வதந்தி நம்ப வேண்டாம்.

இவ்வாறு  வேலூர் பாராளுமன்ற உறுப்பினர்  டி.எம்.கதிர் ஆனந்த் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

No comments

Thank you for your comments