5 சவரன் நகைகடன் தள்ளுபடி சான்றிதழை வழங்கினார் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன்
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் ஒன்றியத்துக்ககு உட்பட்ட கீழம்பி ஊராட்சியில் தமிழக அரசின் கூட்டுறவுத்துறையின் வங்கியில் வைக்கப்பட்ட 5 சவரன் நகைகடன் தள்ளுபடி செய்த சான்றிதழை காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் வழங்கினார்.
இந்நிகழ்வில் காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் நித்ய சுகுமார், காஞ்சி வ.ஒன்றிய செயலாளர் பி.எம்.குமார், மாவட்ட பிரதிநிதி எம்.எஸ்.சுகுமார், கீழம்பி ஊராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி ராஜசேகர், ஒன்றிய அவைத்தலைவர் கே.பி.ராதாகிருஷ்ணன், சம்பத், பி.எம்.நீலகண்டன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


No comments
Thank you for your comments