தேசிய அளவிலான போட்டியில் பதக்கங்களை வென்ற காஞ்சி மாணவிகள்...
காஞ்சிபுரம்:
உத்திரபிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான குதிக்க கயிறு (Jump Rope) போட்டியில் பதக்கங்களை காஞ்சிபுரம் மாநகராட்சி பள்ளி மாணவிகள் வென்றனர்.
உத்திரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் நடைபெற்ற 18வயது உட்பட்ட இளையோர் 2021-2022 ஆம் ஆண்டிற்கான தேசிய அளவிலான குதிக்க கயிறு போட்டி கடந்த மார்ச் 25 முதல் 27தேதி வரை நடைபெற்றது.
இப்போட்டியில் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், தமிழகத்தை சேர்ந்த பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் காஞ்சிபுரத்தை சேர்ந்த 2 மாணவிகள் உட்பட 11பேர் பங்கேற்றனர்.
இந்நிலையில், இப்போட்டியில் கலந்துகொண்ட காஞ்சிபுரம் ராணி அண்ணாதுரை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பில் பயிலும் ஜனனி என்னும் மாணவி 18 வயதிற்கு உட்பட்டோருக்கான தனிநபர் பிரிவில் கலந்துகொண்டு முறையே ஒரு வெள்ளி பதக்கமும், ஒரு வெண்கலப் பதக்கமும் வென்றார்.
அதே போல் இதே பள்ளியை சேர்ந்த 10வகுப்பு பயிலும் இனியா என்னும் மாணவி மூன்று வெண்கல பதக்கங்களையும் வென்றார்.
காஞ்சிபுரம் மாநகராட்சி பள்ளியில் பயிலும் மாணவிகள் தேசிய அளவிலான போட்டியில் பதக்கம் வென்றது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடதக்கது.

.jpg)
No comments
Thank you for your comments