வளர்ச்சித்திட்ட பணிகளை ஆணையர் ராஜ கோபால் சுன்கரா நேரில் ஆய்வு
கோவை, மார்ச் 28:
கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல பகுதியில் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் ராஜ கோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் ஜிஹிஸிமிதி திட்டத்தின் கீழ் வார்டு எண்.43-க்குட்பட்ட கே.கே.புதூர் சாலை, புவனேஸ்வரி நகரில் 298 மீட்டர் தொலைவிற்கு ரூ.43.50 இலட்சம் மதிப்பீட்டிலும், வார்டு எண்.34க்குட்பட்ட எஸ்.பி.நகர் பேஸ்-2 பகுதியில் 954 மீட்டர் தொலைவிற்கு 1.86 கோடி மதிப்பீட்டில், வார்டு எண்.36க்குட்பட்ட நியூ தில்லை நகரில் 440 மீட்டர் தொலைவிற்கு ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் தார் சாலை பணியினை மாநகராட்சி ஆணையாளர் ராஜ கோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து, மேற்கு மண்டலத்தில் வார்டு எண்.43&க்குட்பட்ட கே.கே.புதூர் சாலை, புவனேஸ்வரி நகர், 38வது வார்டுக்குட்பட்ட மருதமலை அடிவாரத்திலும், வார்டு எண்.40க்குட்பட்ட வீரகேரளம் பகுதியிலும் மற்றும் 75வது வார்டுக்குட்பட்ட சீரநாயக்கன்பாளையம் பகுதியிலும் தலா ரூ.25 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் நல்வாழ்வு மையம் கட்டடப்பணிகளையும் மாநகராட்சி ஆணையாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, மாநகரப் பொறியாளர் இராமசாமி, மாமன்ற உறுப்பினர்கள் பி.மல்லிகா, மாலதி, பத்மாவதி, அங்குலட்சுமி, மேற்கு மண்டல உதவி ஆணையாளர் சரவணன், உதவி செயற்பொறியாளர் ஹேமலதா, உதவி பொறியாளர் திருமூர்த்தி மற்றும் மாநரகாட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.
.jpg)
No comments
Thank you for your comments