Breaking News

காஞ்சிபுரம் மாநகராட்சியில் வெற்றி பெற்ற 50 மாமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்பு

காஞ்சிபுரம்:

தமிழகத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற மாமன்ற உறுப்பினர்கள் இன்று பதவி ஏற்பு விழா நடைபெற்றது.


பெருநகராட்சியில் இருந்து தரம் உயர்த்தப்பட்டுநடைபெற்ற முதல் காஞ்சிபுரம் மாநகராட்சியில் தேர்தலில் மொத்தம் 50 வார்டில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் பதவியேற்றனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் (தேர்தல் அதிகாரி) பதவி பிரமானம் செய்து வைக்க மாமன்ற உறுப்பினர்கள் பதவியேற்றனர் 

திமுக மற்றும் அதன் கூட்டனி கட்சியினர் 32 பேரும், அதிமுகவை சேர்ந்த 9 பேரும், பா.ம.கவை சேர்ந்த 2 பேரும், பா.ஜ.கவை சேர்ந்த ஒருவரும் சுயேச்சையாக வெற்றி பெற்ற 6 பேர் என மொத்தம் 50 மாமன்ற உறுப்பினர்கள் பதவியேற்றனர்.


காஞ்சிபுரம் மாநகராட்சியில் மொத்தம் 51 வார்டுகள் உள்ளது 36 வது வார்டில் அதிமுக வேட்பாளர் தற்கொலை செய்து கொண்டதின் காரணமாக அந்த ஒரு வார்டில் மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது இதனால் காஞ்சிபுரம் மாநகராட்சியில் 50 வார்டில் மட்டுமே தேர்தல் நடைபெற்றது.

இந்த பதவியேற்ப்பு விழாவில் காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான க சுந்தர்,காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.செல்வம், காஞ்சிபுரம்சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி எழிலரசன்,நகர செயலாளர் சன்பிராண்ட். கே.ஆறுமுகம், மாவட்ட அவைத்தலைவர் சி.வி.எம்.அ.சேகரன்,முருகன் பட்டு கூட்டுறவு சங்க தலைவர் ஏ.எஸ்.முத்துசெல்வன்,தலைமை பொது குழு உறுப்பினர் எஸ்கேபி சீனிவாசன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் அளவூர் நாகராஜன்,விசிக மாவட்ட தலைவர் பாசறை செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



No comments

Thank you for your comments