12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 5ம் தேதி தொடக்கம்.... 10-ம் வகுப்பு தேர்வு மே 6ம் தேதி தொடக்கம்
சென்னை:
11-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே மாதம் 9ம் தேதி தொடங்கி 31ம் தேதி வரை நடைபெறும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே மாதம் 5ம் தேதி தொடங்கி 28ம் தேதி வரை நடைபெறும்.
11-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே மாதம் 9ம் தேதி தொடங்கி 31ம் தேதி வரை நடைபெறும்.
10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே மாதம் 6ம் தேதி தொடங்கி 30ம் தேதி வரை நடைபெறும்.
10, 11 மற்றும் 12 -ம் வகுப்புக்கான செய்முறை தேர்வுகள் ஏப்ரல் 25ம் தேதி தொடங்குகிறது.
மாணவர்கள் பதற்றம் அடையாமல் தேர்வை எதிர்கொள்ளவேண்டும்
இவ்வாறு அவர் கூறினார்.
No comments
Thank you for your comments