சிஐடியு சார்பில் 24 மணி நேர உண்ணாவிரத போராட்டம்
ஈரோட்டில் சிஐடியு சார்பில் 24 மணி நேர உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது...
ஈரோடு மாவட்டத்தில், அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் (சிஐடியு) சார்பில் ஈரோடு மண்டல அலுவலகம் முன்பு கடந்த 05.03.2022 சனிக்கிழமையன்று கழகங்களைப் பாதுகாக்க தொழிலாளர் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்குடன் மாநிலம் தழுவிய 24 மணிநேர உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
இதில் 10 ஆண்டுகால வஞ்சனைக்கு முடிவுகட்ட வேண்டும், 14 வது ஊதிய ஒப்பந்தத்தை இறுதி படுத்த வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும், 1.4.2003க்கு பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு கழக ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்றும் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, மருத்துவ காப்பீடு, ஓய்வு காலப் பலன்களை வழங்க வேண்டும் என்றும் அதிகாரிகளின் அடாவடிக்கு முடிவுகட்ட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 24மணி நேர உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
மேலும் இந்த உண்ணாவிரத போராட்டமானது மண்டல தலைவர் கே. மாரப்பன் தலைமையில் நடைபெற்றது. மாநில துணை பொதுச்செயலாளர் டி. ஜான்சன் கென்னடி துவக்கி வைத்தார். மேலும் மாநில பன்முகத் தலைவர் என். முருகையா மற்றும் ஓய்வு பெற்றோர் நல அமைப்பு தலைவர் பி. ஜெகநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் சிஐடியு சார்ந்த பலர் பங்கேற்றனர்.
No comments
Thank you for your comments