மாநகராட்சியின் 2022 - 2023 ம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை திட்டங்கள் வெளியீடு
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூர் மாநகராட்சியின் 2022 - 2023 ம் நிதியாண்டிற்கான இந்நிதிநிலை அறிக்கையில் திட்டங்கள் மாநகராட்சியின் அனைத்துத் தரப்பு மக்களின் தேவைகளை நிறைவேற்றும் விதமாக குடிநீர் விநியோகம், பாதாள சாக்கடைத் திட்டப்பணிகள் உட்கட்டமைப்பு மேம்படுத்துதல் உள்ளிட்ட உட்கட்டமைப்புப் பணிகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டு திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய தேவைகளான திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட பணிகளுக்கும் போதுமான அளவில் திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளது.
2022 - 2023 ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் இம்மாநகராட்சியில் பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப இரண்டு நாட்களுக்கு ஒருமுறை சீரான குடிநீர் விநியோகம், இணைப்பு சாலைகள், மண்டல அளவிலான பணிகளுக்கான ஒதுக்கீடு, இணைக்கப்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள், தெருவிளக்குகள் பொருத்துதல், மாநகராட்சியின் அனைத்து பள்ளிகளிலும் வகுப்பறைகள் மற்றும் நவீன கழிப்பறை வசதிகள் ஏற்படுத்துதல், பள்ளி நூலகத்திற்கு புத்தகங்கள் வாங்குதல், நல்வாழ்வு மையங்கள் மற்றும் பொது சுகாதார ஆய்வகங்கள், சூரிய மின் உற்பத்தி நிலையம், பலஅடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைத்தல், பூங்காக்களில் திறந்தவெளி உடற்பயிற்சிக் கூடம் அமைத்தல், தூய்மைப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குதல், நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைத்தல், மியாவாக்கி திட்டம், சிறந்த மாமன்ற உறுப்பினர் விருது, வரிவசூல் மையங்கள் அனைத்தும் மேம்படுத்துதல் முதலிய ஆக்கப்பூர்வமான திட்டங்கள் இந்நிதிநிலை அறிக்கையில் முன்மொழியப்பட்டு, கோயம்புத்தூர் மாநகராட்சியை தனிச் சிறப்புமிக்க மாநகராட்சியாக மாற்றுவதற்குத் தேவையான சிறப்பு அம்சங்களை உள்ளடக்கியதாக இந்நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்த நிதி நிலைமை
2022-23-ம் நிதியாண்டில் வருவாய் மற்றும் மூலதன வரவுகள் மொத்தம் ரூ. 2,317.97 கோடி எனவும், வருவாய் மற்றும் மூலதனச் செலவுகள் மொத்தம் ரூ. 2,337.28 கோடி எனவும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் 2022-2023-ம் நிதியாண்டில் நிகரப் பற்றாக்குறை ரூ. 19.31 கோடி ஆகும்.
முழு நிதிநிலை அறிக்கை
click here 👉 Budget 2022-2022
No comments
Thank you for your comments