சென்னை-ஜோலார்பேட்டை ஏலகிரி ரயில் உட்பட முன்பதிவு இல்லாத பெட்டிகளுடன் 14 விரைவு ரயில் மீண்டும் இயக்கம்
சென்னை:
சென்னை-ஜோலார்பேட்டை ஏலகிரி ரயில் உள்பட 14 விரைவு ரயில்கள் மீண்டும் முன்பதிவு இல்லாத பெட்டிகளுடன் இயக்கப்பட உள்ளது.
சென்னை சென்ட்ரலில் இருந்து ஜோலார்பேட்டை ஏலகிரி ரயில் உள்பட 14 விரைவு ரயில்கள் மீண்டும் முன்பதிவு இல்லாத பெட்டிகளுடன் இயக்கப்பட உள்ளன. இந்த நடைமுறை வருகிற 1ம் தேதி முதல் நடை முறைக்கு வருகிறது.
சென்னை சென்ட்ரல்-ஜோலார்பேட்டை ஏலகிரி விரைவு ரயில் (16089), ஜோலார்பேட்டை- சென்னை சென்ட்ரல் ஏலகிரி விரைவு ரயில் (16090), நிலம்பூர் சாலை- கோட்டயம் விரைவு ரயில் (16325), கோட்டயம்- நிலம்பூர் சாலை விரைவு ரயில் (16326), புனலூர்- குருவாயூர் விரைவு ரயில் (16327), திருச்சி சந்திப்பு- பாலக்காடு டவுன் விரைவு ரயில் (16843), பாலக்காடு டவுன்-திருச்சி சந்திப்பு விரைவு ரயில் (16844), நாகர்கோவில்-கோட்டயம் விரைவு ரயில் (16366) உள்பட 14 விரைவு ரயில்கள் மீண்டும் முன்பதிவு இல்லாத பெட்டிகளுடன் இயக்கப்பட உள்ளது.
முன்பதிவு பெட்டிகள் தற்போது முன்பதிவில்லாத பெட்டிகளாக மாறுவதால் இதில் ஏற்கனவே முன்பதிவு செய்தவர்கள் முழு பணத்தையும் திரும்ப பெறலாம். இது தொடர்பாக இந்த ரயில்களில் முன்பதிவு செய்த பயணிகளின் செல்போன் எண்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.
No comments
Thank you for your comments