Breaking News

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகளை கண்காணிக்க பார்வையாளர்கள் (Local Level Observer) நியமனம்

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டம், 2022 ஆம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தல் பணிகளை மாநகராட்சி / நகராட்சி / பேரூராட்சி வாரியாக கண்காணிக்கும் பொருட்டு, 5 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும்  உள்ளூர் அளவிலான பார்வையாளர்கள் (Local Level Observer) நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு திரு. ஆர். பன்னீர்செல்வம், மாவட்ட வருவாய் அலுவலர், காஞ்சிபுரம் (கைபேசி எண். 9445000903) அவர்களும்,

திருப்பெரும்புதூர் பேரூராட்சிக்கு திருமதி. எஸ். மதுராந்தகி, சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (நிலஎடுப்பு) ஓரகடம், இருங்காட்டுக்கோட்டை விரிவு – 1, சிப்காட், திருப்பெரும்புதூர் (கைபேசி எண். 7305955670) அவர்களும்,

உத்திரமேரூர் பேரூராட்சிக்கு திரு. P. பாபு, மாவட்ட வழங்கல் (ம) நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர், காஞ்சிபுரம் (கைபேசி 9445000168) அவர்களும்,

வாலாஜாபாத் பேரூராட்சிக்கு திரு. பிரகாஷ்வேல், மாவட்ட ஆதிதிராவிடர் (ம) பழங்குடியின நல அலுவலர், காஞ்சிபுரம் (கைபேசி 7338801259) அவர்களும்,

மாங்காடு நகராட்சிக்கு திரு.G.சீனிவாசராவ், திட்ட இயக்குநர், மகளிர்திட்டம், காஞ்சிபுரம் (கைபேசி எண். 9444094280) அவர்களும்,

குன்றத்தூர் நகராட்சிக்கு            திரு. D. கோபி, உதவி இயக்குநர் (தணிக்கை), காஞ்சிபுரம் (கைபேசி எண். 7402606006)  அவர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

No comments

Thank you for your comments