Breaking News

மருத்துவ படிப்பில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு டிஐஜி ஆனி விஜயா பாராட்டு

வேலூர்:   

வேலூர் உள்பட 4 மாவட்டங்களில் மருத்துவ படிப்பில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களை டிஐஜி ஆனி விஜயா பாராட்டினார்.

அரசு பள்ளிகளில் படித்து 7.5 இது இட ஒதுக்கீட்டில் மருத்துவம் படிக்க தேர்வு செய்யப்பட்டுள்ள வேலூர் சரகத்தை சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா வேலூர் டிஐஜி அலுவலகத்தில்  நடந்தது.  வேலூர் சரக டி.ஐ.ஜி. ஆனி விஜயா தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜேஷ் கண்ணன், தீபா சத்யன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த அரசு பள்ளியில் படித்து மருத்துவப் படிப்பிற்கு தேர்வாகி உள்ள 43 மாணவ மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

பின்னர் டிஐஜிஆனி விஜயா கூறியதாவது,  வேலூர் சரகத்தில் மண்ணுக்கும் மக்களுக்கும் பயன் அளிக்கும் வகையில் அதிரடியாக பல்வேறு வாழ்வியல் வழிமுறைகள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.  

அதன்படி இந்த ஆண்டு முதல் மண் மற்றும் இயற்கை வளத்தை அதிகரிக்கும் வகையில் பசுமை திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. போலீசார் மூலம் மரங்கள் நடப்படும்.  மேலும் காவலர்களை ஒருங்கிணைத்து அவர்களுக்கு தன்னம்பிக்கை வளர்த்தல் மற்றும் யோகா முத்திரை பயிற்சிகள் வழங்கப்படும்.

பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பெண்களுக்கு காவல்துறை மூலம் தொழிற்பயிற்சி போலீசார் தேர்வுக்கு இலவச பயிற்சி போன்ற இலவச பயிற்சிகள் வழங்கப்படும். 

இதுபோன்ற 13 வகையான திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் வீரளூர் கிராமத்தில் நடைபெற்ற சம்பவத்தில் சட்டப்படி அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  மேலும் பொதுமக்களுக்கு சட்டம் ஒழுங்கு தொடர்பான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments

Thank you for your comments