Breaking News

சாலை ஓரங்களை ஆக்கிரமித்து கனரக வாகனங்களை அப்புறபடுத்த வலுக்கும் கோரிக்கை

கன்னியாகுமரி  :

சாலை ஓரங்களை ஆக்கிரமித்து கனரக  வாகனங்களை நிறுத்திவைத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துகின்ற வாகனங்களை உடனடியாக அப்புறப்படுத்தி பாதசாரிகளுக்கு பாதையை ஏற்படுத்தி தர மாவட்ட நிர்வாகத்திற்கு சமூக ஆர்வலர்  வழக்கறிஞர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

குமரி மாவட்டத்திற்கு முக்கியமான தலைவர்கள் வரும்போது சாலை ஓரத்தில் ஏதாவது பொருட்கள் வாங்க வாகனங்களை நிறுத்தினால் உடனடியாக காவலுக்கு நிற்கின்ற காவலர்கள் கெட்ட வார்த்தைகளால் திட்டி வாகனங்களை அப்புறப்படுத்த தொந்தரவு செய்கின்றார்கள் ஆனால் அந்தப் பெரிய தலைவர்கள் வந்து விட்டுச் சென்ற பின்னர் அந்த சாலையை பற்றி அவர்கள் கண்டு கொள்வதே இல்லை .

இதனால் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட முக்கிய சாலையில் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத அளவிற்கு சாலை ஓரங்களில் செப்டிக் டேங்க் லாரிகள், தனியார் பேருந்துகள், நூற்றுக்கணக்கான லாரிகள், ரெக்கவரி வாகனங்கள், மற்றும் தனியார் தொலைத்தொடர்பு கேபிள் போட இரும்பு தூண்கள் போன்ற பல்வேறு பொருட்களைக் கொண்டு சாலை ஓரங்களை   நிரப்பி வைத்திருக்கின்றனர் இதனால் சாலையில் பாதசாரிகள் நடந்து செல்ல முடியாமல் வாகனங்கள் வருகின்ற சாலையில் நடந்து செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் பாதசாரிகள் மீது வாகனங்கள் மோதி பெரியவர் முதல் சிறியவர் வரை பாதிப்புக்குள்ளாகின்றனர். 

குறிப்பாக நகரின் முக்கிய பேருந்து நிலையமான வடசேரி பேருந்து நிலையத்திலிருந்து டிஸ்லரி ரோடுக்கு  வருகின்ற சாலை முழுவதும் செப்டிக் டேங்க் லாரிகளை கொண்டு சாலை ஓரங்களில் நிரப்பி வைத்துள்ளனர்.

மேலும்  இந்த செப்டிக் டேங்க் வாகன ஓட்டிகள் பெண்கள் வரும்போது ஏளனமாக பேசி கிண்டல் செய்வதும் பெண்களை புகைப்படம் எடுத்து வைத்து ரசிப்பதும்  மாலை வேளைகளில் லாரியின் அருகாமையில் அமர்ந்து மது அருந்துவதும்  மது குடித்த பாட்டில்களை ரோட்டில் போட்டு உடைத்து வைத்திருப்பதும் அனுதினமும் நடக்கின்ற ஒரு செயலாக நடந்து வருகிறது

இவர்களின் வாகனங்களை இந்த மெயின் சாலையில் நிறுத்த  இவர்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார்...?

இவர்கள் கனரக வாகனங்களை நகருக்கு வெளிப் புறமாய் ஒழுகினசேரி க்கு அப்பால் நிறுத்த வேண்டியது தானே... 

செப்டிக் டேங்க் லாரிகள் நிறுத்துவதற்கும், பெரிய பெரிய மர ஆலைகளில் உள்ள கனரக வாகனங்களை ( கிரெயின் மற்றும் ஜேசிபி) நிறுத்துவதற்கும் போக்குவரத்து காவல்துறை  இவர்களிடம் இருந்து கமிஷன் பெற்றுக்கொண்டும்  சாலை ஓரங்களில் வாகனங்களை நிறுத்தி வைப்பதை கண்டு கொள்ளாமல் விட்டு விடுகிறார்கள் என்ற கேள்வி எழுகின்றது..

எனவே மாவட்ட நிர்வாகமும், போக்குவரத்து காவல் துறையும் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு,  24 மணி நேரமும் பரபரப்புடன் காணப்படும் ஸ்டேட் பேங்க் ரோடு,  வடசேரி ரோடு,  பெண்கள் கிறிஸ்தவ கல்லூரியில் இருந்து வெட்டுனிமடம் செல்லும் சாலை, மற்றும் வெட்டுனிமடத்திலிருந்து  கிருஷ்ணன்கோவில் செல்கின்ற சாலை ஓரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள லாரி மற்றும் செப்டிக் டேங்க் லாரிகள், போன்ற கனரக வாகனங்களையும் தனியார் தொலைத்தொடர்பு கேபிள் இரும்புத் தூண்கள் போன்றவற்றை உடனடியாக அப்புறப்படுத்தி நடவடிக்கை மேற்கொண்டு பாதசாரிகள் நடந்து செல்ல பாதைகளை ஏற்படுத்தித்தர வேண்டுமென்று சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான வே.ஐயப்பன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments

Thank you for your comments