Breaking News

மறைமுக தேர்தல் பண பேரத்திற்கு வழிவகுக்கும் - வேலூரில் சீமான் பேட்டி

வேலூர்:

மறைமுக தேர்தல் பண பேரத்திற்கு வழிவகுக்கும் மாநகராட்சி மேயரை மக்கள் நேரடியாக தேர்வு செய்ய வேண்டும் என வேலூரில் சீமான் கூறினார்.

வேலூர் பாகாயம் தனியார் திருமண மண்டபத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிமுக கூட்டம் 15-02-2022 அன்று நடந்தது. இதில் சீமான் கலந்து கொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசினார். 

தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

எல்.ஐ.சி தனியார் மயமாக்கப்படும் என அறிவித்ததை எதிர்த்து நாங்கள் போராடி வருகிறோம். அதை முதல்வர் பேசியுள்ளார். எல்.ஐ.சி. தனியார் மயக்காலை மத்திய அரசு கைவிட வேண்டும் என முதல்வர் கூறியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. 

மத்திய அரசு லாபத்தில் இயங்கும் அனைத்து பொது நிறுவனங்களையும் விற்கிறோம் என்கிறார்கள். இழப்பில் போகும் தனியார் நிறுவனங்களை அரசே ஏற்கும் என்கிறார்கள். இது எந்த மாதிரியான ஆட்சி முறை என்றே தெரியவில்லை. 

எல்.ஐ.சி. தனியார் மயமாக்குவதை அனுமதிக்க கூடாது. இதில் எங்களை போலவே போராட்டம், ஆர்ப்பாட்டம் செய்யாமல் 39 எம்.பிக்களை வைத்துள்ளவர்கள் பாராளுமன்றத்தில் தீவிரமாக எதிர்க்க வேண்டும்.

அ.தி.மு.க., தி.மு.க. என 2 கட்சியுமே உள்ளாட்சி தேர்தலை நியாயமாக நடத்துவதில்லை.  ஆட்சி அதிகாரத்தில் மற்ற வேட்பாளர்களை அச்சுறுத்தி திரும்ப பெற செய்கிறார்கள். இப்போதே ஆள்கடத்தல் அச்சுறுதல் உள்ளது ஆட்சிக்கு வந்துவிட்டால் என்ன ஆகும்.

நகர்புற தேர்தலில் மறைமுக தேர்தல் அவசியமற்றது நேரடியாக மேயரை தேர்தெடுக்க வேண்டும். மறைமுக தேர்தல் பேரத்துக்கே வழிவகுக்கும். இது ஜனநாயகம் அல்ல பண நாயகம் தான்.

தேர்தல் நேரம் என்பதால் தான் அ.தி.மு..க- தி.மு.க. நீட் விவகாரம் குறித்து பேசுகிறார்கள். தேர்தல் நேரத்தில் பா.ஜ.க கார் எரியும், அலுவலகத்தில் குண்டு போடுவார்கள், தேர்தல் நேரத்தில் காவி துணி அணிந்து கல்லூரிக்கு செல்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

No comments

Thank you for your comments