23வது வார்டு வேட்பாளரை ஆதரித்து எம்.எல்.ஏ., எழிலரசன் தீவிர வாக்கு சேகரிப்பு...
வருகின்ற பிப்ரவரி 19 அன்று தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலானது நடைபெற உள்ள நிலையில் காஞ்சிபுரத்தில் 51 வார்டுகளிலும் திமுக அதிமுக பாமக பாஜக நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளை சார்ந்த வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சி 23வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர் எஸ்.மஞ்சுளா அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் ஆதரித்து காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர்-திமுக மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் கலந்துகொண்டு 23வது வார்டுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் உதயசூரியத்தில் வாக்குகளை சேகரித்தார்.
இதில் காஞ்சிபுரம் நகர செயலாளர் சன்பிராண்ட் கே.ஆறுமுகம், தேர்தல் பொறுப்பாளர்கள் எஸ்.பி.பூபாலன், வேதாச்சலம், ஏ.எஸ்.முத்துசெல்வம், 23வது வட்டத்தை சேர்ந்த ஜெயக்குமார், முரளி, ஸ்ரீதர், சுதாகரன் உள்ளிட்ட திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
No comments
Thank you for your comments