திமுக வேட்பாளர் மாரடைப்பால் உயிரிழப்பு...
ஈரோடு :
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே அத்தாணி பேரூராட்சி 3-வது வார்டு தி.மு.க. வேட்பாளரான ஐய்யப்பன் மாரடைப்பு காரணமாக நள்ளிரவில் உயிரிழந்துள்ளார்.
தமிழ்நாட்டில் வரும் பிப்.19ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடத்தப்பட உள்ளதால் தமிழகம் முழுவதும் இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதேபோல் ஈரோடு மாவட்டத்திலும் தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதையடுத்து, நாளை (17ம் தேதி) மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது. இந்நிலையில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் அந்தியூர் அருகே உள்ள அத்தாணி பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் என்பவர் அத்தாணி பேரூராட்சியில் 3ஆம் வார்டு கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு அவர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் ஐயப்பன் நள்ளிரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தேர்தலுக்கு ஒருசில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், வேட்பாளர் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வேட்பாளரின் உயிரிழப்பு குறித்து செய்தி அறிந்த அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் நேரில் சென்று ஐய்யப்பன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்..
No comments
Thank you for your comments