பெரியார் பூங்கா மூடப்பட்டு சீல் .......
வேலூர் :
வேலூர் மாவட்டம், தொல்லியல் துறைக்கு சொந்தமான வேலூர் கோட்டை தெற்கு பகுதியில் உள்ள பூங்காவினை குத்தகை அடிப்படையில் பராமரித்து வந்த M/s Kalap Ads நிறுனத்ததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு எண்:W.P.No 12554/2013 மற்றும் பல்வகை மனு எண். 1/2013 மீது சென்னை உயர்நீதிமன்றத்தால் 25.11.2021 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பில் பூங்காவினை பராமரிக்க புதிய ஏல அறிவிப்பு வெளியிட அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து மேற்படி குத்தகைதாரரை உடனடியாக பூங்காவினை காலி செய்து வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி) வசம் ஒப்படைக்குமாறு முறையாக அறிவிப்பு கடிதம் அனுப்பப்பட்டது.
கடிதம் அனுப்பிய பின்னர் இரண்டு வாரங்கள் கால அவகாசம் எடுத்துகொண்ட நிலையிலும் 31.01.2022 அன்று வரை பூங்காவினை முறையாக ஒப்படைக்காத காரணத்தினால் நேற்று 31.01.2022 அன்று மாலை வருவாய்துறையினர் முன்னிலையில் பூங்கா மூடப்பட்டு முத்திரையிடப்பட்டது.
பூங்காவினை குத்தகை அடிப்படையில் பராமரிக்கும் புதிய ஏலத்திற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
No comments
Thank you for your comments