Breaking News

6 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை.... போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது

காட்பாடி:

பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து சித்திரவதை செய்த தந்தையை,  காட்பாடி மகளிர் போலீசார்  போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பிரம்மபுரத்தை சேர்ந்தவர் குமரன் (34). இவரது மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.

இந்த நிலையில் குமரன் தனது குழந்தையுடன் வாழ்ந்து வந்துள்ளார் நாளடைவில் தற்பொழுது அந்த சிறுமிக்கு 6 வயது ஆகின்றது.  தனது 6-வயது மகளான சிறுமிக்கு  குமரன் பாலியல் தொல்லை  கொடுத்து வந்துள்ளார்.

இதனை அந்த சிறுமி வெளியில் சொல்லாமல் இருக்க பெல்ட்டால் தாக்கி இதை வெளியில் சொன்னால் உன்னை கொலை செய்துவிடுவேன் என கத்தியை காட்டி மிரட்டி சிறுமியை சித்ரவதை செய்துள்ளார்.

இதனையடுத்து சிறுமி உடல் முழுவதும் காயம் ஏற்பட்டுள்ளதை கண்ட பக்கத்து வீட்டுக்காரர் சிறுமியிடம் விசாரித்துள்ளார் சிறுமியை அனைத்து உண்மைகளையும் கூறியதன் அடிப்படையில் உடனடியாக காட்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் காஞ்சனா வழக்குப்பதிவு செய்து குமரனை போக்சோ சட்டத்தில் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் அவரது வீட்டில் இருந்த சிறுமியை தாக்கிய பெல்ட் கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

பெற்ற மகளுக்கே தந்தை பாலியல் தொல்லை கொடுத்த சித்திரவதை செய்தது காட்பாடி பிரம்மபுரம் பகுதியில் பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது 

மேலும் குமரன் மீது வேலூர் மாவட்டம் ரத்தினகிரி காவல் நிலையம் உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் குமரன் மீது குற்ற வழக்குகள் பல  நிலுவையில் உள்ளது குறிப்பிட்டத்தக்கது.

No comments

Thank you for your comments