Breaking News

அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திமுக பெண் வேட்பாளர் கீதாஞ்சலி செந்தில்குமார்...

ஈரோட்டில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில்  வெற்றி பெற்ற திமுக பெண் வேட்பாளர் கீதாஞ்சலி செந்தில்குமார்... 

ஈரோடு மாநகராட்சியில் 19.02.2021 அன்று நடைபெற்ற தேர்தலில் 39-வது வார்டில் மொத்தம் 5186 வாக்குகள் பதிவாகியது. அதில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கீதாஞ்சலி செந்தில்குமார்  4,693 வாக்குகளைப் பெற்றார்.

மேலும் 39-வது  வார்டில் போட்டியிட்ட மற்ற  வேட்பாளர்களான  அதிமுக வேட்பாளர் சகிலா 230 வாக்குகளும்,  பாஜக வேட்பாளர் விஜயலட்சுமி 107 வாக்குகளும்,  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் முத்துலட்சுமி 93 வாக்குகளும்,  சுயேட்சையாக போட்டியிட்ட வேட்பாளர் ராஜேஸ்வரி 48 வாக்குகளும் மற்றும்  தேமுதிக வேட்பாளர் 16 வாக்குகளும் பெற்றிருந்தனர்.

இதில் திமுக வேட்பாளர் கீதாஞ்சலி செந்தில்குமார் 4,463 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

No comments

Thank you for your comments