Breaking News

சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு சுழற்கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு..

கோவை

கோவை மாவட்டத்தில் நடந்த மாதாந்திர குற்ற விவாதிப்பு கூட்டத்தில் ஜனவரி மாதத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு சுழற்கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது. 

சிறப்பாக பணிபுரிந்த ஆனைமலை காவல் நிலைய  ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் சிறப்பாக பணிபுரிந்த பொள்ளாச்சி மகாலிங்கபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்  கௌதம், நிலைய பதிவேடுகளை சிறப்பான முறையில் பராமரித்த பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய முதல்நிலை காவலர்(Gr-1Pc:418) ரஞ்சித் குமார், சிறந்த முறையில்  CCTNSல் கோப்புகளை  பதிவேற்றம் செய்த காரமடை காவல் நிலைய  தலைமை காவலர்(HC:662) வர்கிஸ், சிறப்பான முறையில் வழக்கினை கோப்பிற்கு எடுத்து திறம்பட செயல்பட்ட பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய நீதிமன்ற  தலைமை காவலர்(HC-1778) நவநீதகிருஷ்ணன் பெண்கள் உதவி மையத்தில் சிறந்த முறையில் பணியாற்றிய  தடாகம் காவல் நிலையம் பெண் காவலர்(WPC:1675) இந்து பிரியா மாவட்டத்தில் காணாமல் போன நபர்களை அதிக அளவில் கண்டுபிடித்த  பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய காவலர்(PC:1808) ரஞ்சித் குமார் ஆகியோர்களுக்கு 

சுழற்கோப்பை மற்றும் சான்றிதழ்களையும், சிறந்த காவல் நிலையமாக ஆனைமலை காவல் நிலையம் தேர்வு செய்து அதற்கான சுழற்கோப்பையை ஆனைமலை காவல் உதவி ஆய்வாளர்  சின்னக்காமணன் அவர்களுக்கு கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்  செல்வநாகரத்தினம் இ.கா.ப., வழங்கி  கௌரவ படுத்தினார்கள். 

ஒவ்வொரு மாதமும் இதுபோன்ற சிறந்த செயல்பாடுகள் குறித்து பரிசீலனை செய்து சுழற்கோப்பை வழங்கப்படும் என்று கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்  தெரிவித்துள்ளார்.

இப்புதிய அணுகுமுறை அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதுபோன்ற பாராட்டுக்கள் காவல்துறையினர் திறம்பட செயல்படுவதற்கு ஊக்குவிப்பாக அமைகிறது.

No comments

Thank you for your comments