எடப்பாடி அருகே மின்சாரம் தாக்கி மின் ஊழியர் படுகாயம்
சேலம்
சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த ஆடையூர் பகுதியில் பவர் ஹவுஸ் உள்ளது. அதை தொடர்ந்து ஜலகண்டாபுரம் செலவடை பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி அவரின் மகன் கந்தசாமி மின்சாரம் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்.
இவர் மின்னழுத்தம் அறையில் மின்சாரத்தை நிறுத்திவிட்டு வேலை செய்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி பலத்த தீக்காயங்களுடன் எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேல்சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து பூலாம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதனால் இச்சம்பவம் அப்பகுதியில் மின்சார ஊழியர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் எஸ். எம். பாண்டியன்
No comments
Thank you for your comments