Breaking News

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் செயற்கை நுண்ணறிவு இயங்கும் தளம் உருவாக்குவதற்கான புரிந்துணர்வு

 தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயமுத்தூர் மற்றும் என்.இ.சி கார்பரேஷன் இந்தியா பிரைவேட் லிமிடெட் (எஸ்ட்ஒய்ல் என்.இ.சி டெக்னாலஜிஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்), புதுதில்லி இடையே தக்காளியை தாக்கும் முக்கிய நோய்களைக் கண்டறிவதற்கான செயற்கை நுண்ணறிவு இயங்கும் தளம் உருவாக்குவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை கையெழுத்தாகியது. 



இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் மற்றும் செயல் துணைவேந்தரான முனைவர். அ.க. கிருட்டிணமூர்த்தி, பயிர் பாதுகாப்பு மைய இயக்குநர் முனைவர். கு. பிரபாகர், ஆராய்ச்சி இயக்குநர் முனைவர். கே.எஸ். சுப்ரமணியன், பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர். கா. கார்த்திகேயன் மற்றும் உதவி பேராசிரியர் (பயிர் நோயியல்) முனைவர். எல். கார்த்திபா ஆகியோர் முன்னிலையில் கையெழுத்திட்டார்.


No comments

Thank you for your comments