சர்க்கார் பட பாணியில் அமெரிக்காவிலிருந்து விமானம் மூலம் வந்து வாக்களித்த வாலிபர்...
காஞ்சிபுரம்:
விஜய்யின் சர்க்கார் பட பாணியில் அமெரிக்காவிலிருந்து விமானம் மூலம் வந்து காஞ்சிபுரம் மாநகராட்சி தேர்தலில் வாக்களித்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றிய காஞ்சிபுரத்தை சேர்ந்த வாலிபர்.
தமிழகத்தில் நடைபெற்று வரும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவையொட்டி காஞ்சிபுரம் மாநகராட்சியில் 50 வார்டுகளுக்கான வாக்குப்பதிவு காலை முதலே தொடங்கி விறுவிறுப்பான முறையில் நடந்து வருகிறது.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட அப்பாராவ் முதலி தெருவை சேர்ந்த லியாகத் ஷெரீப் என்பவரின் மகன் இம்தியாஸ் ஷெரீப் .
அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சொந்தமாக ஐடி கம்பெனி ஒன்றை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் காஞ்சிபுரம் பெருநகராட்சி தரம் உயர்த்தப்பட்டு முதல் முறையாக காஞ்சிபுரம் மாநகராட்சி தேர்தல் நடைபெறுவதை அறிந்து தனது வாக்கினை பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக விஜயின் சர்க்கார் பட பாணியில் விமானம் மூலம் தனது சொந்த ஊரான காஞ்சிபுரத்துக்கு வந்தார்.
காஞ்சிபுரம் தாமல்வார் தெருவில் அமைந்துள்ள புனித சூசையப்பர் ஆரம்ப பள்ளியில் உள்ள வாக்குபதிவு மையத்திற்கு வந்து தனது வாக்கினை பதிவு செய்தார்.
காஞ்சிபுரம் மாநகராட்சி தேர்தலில் வாக்குப் பதிவு செய்வதற்காக அமெரிக்காவிலிருந்து வந்து வாக்கு பதிவு செய்து ஜனநாயக கடமை ஆற்றிய வாலிபரின் செயலை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இம்தியாஸ் ஷெரீப்,
அமெரிக்காவில் வசித்து வந்தாலும் இந்திய குடிமகனாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்குப் பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக முன்கூட்டியே திட்டமிட்டு காஞ்சிபுரம் வந்து தனது வாக்கினை பதிவு செய்து, தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றி உள்ளதாகவும்,அனைவரும் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் என வாக்காளர்களுக்கு வாலிபர் இம்தியாஸ் ஷெரீப் வேண்டுகோள் விடுத்தார்.
No comments
Thank you for your comments