Breaking News

100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி போலீசார் அணிவகுப்பு

கோயம்புத்தூர்:

கோயம்புத்தூர் மாவட்டம் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி வாக்காளர்கள் எந்த பயமுமின்றி 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி போலீசார் கொடி அணிவகுப்பு  கோவை மாவட்ட  காவல்துறை கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் தலைமைமில் நடைபெற்றது. 

கொடி அணிவகுப்பு வடவள்ளி பழைய பஸ் நிலையம் பகுதியில் தொடங்கி  தொண்டாமுத்தூர் ரோடு சந்திப்பு, மருதமலை ரோடு வழியாக நவாவூர் பிரிவு, குருசாமி நகரில் நிறைவடைந்தது. இந்நிகழ்வில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், துணை காவல் கண்காணிப்பாளர், மற்றும் காவல் ஆய்வாளர்கள், துணை காவல் ஆய்வாளர்கள் என 90 நபர்கள் கலந்து கொண்டனர்.


No comments

Thank you for your comments