Breaking News

இரு துளி போலியோ சொட்டு மருந்து வழங்கி குழந்தைகளின் வாழ்க்கை நலனை பாதுகாத்திட வேண்டும் - ஆட்சியர் ஹெச். கிருஷ்ணனுண்ணி

ஈரோடு :

ஈரோடு மாநகராட்சி மத்திய பேருந்து நிலையத்தில் தீவிர போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் இன்று நடைபெற்றது....

ஈரோடு மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் சார்பில் ஈரோடு மாநகராட்சி மத்திய பேருந்து நிலையத்தில் தீவிர போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் மாவட்ட கலெக்டர் ஹெச். கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடைபெற்றது. இதில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இந்த போலியோ சொட்டு மருந்து வழங்கும் நிகழ்ச்சியில் கணேசமூர்த்தி எம்.பி. முன்னிலை வகித்தார்.

இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்ததாவது... 

இம்முகாமில் 2,00,816 குழந்தைகளுக்கு 1400 மையங்களில் 5533 பணியாளர்களைக் கொண்டு போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணி செய்திட  97 அரசுத்துறை வாகனங்கள் முகாமிற்காக பயன்படுத்தப்பட்டது. ஆகவே, ஈரோடு மாவட்டத்தில் உள்ள மக்கள் அனைவரும் தங்களது இல்லத்தில் உள்ள 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் ஏற்கனவே எத்தனை முறை போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும், இன்று தங்களது பகுதியில் நடக்கும் போலியோ சொட்டு மருந்து முகாம் மையத்தில் இரு துளி போலியோ சொட்டு மருந்து வழங்கி தங்கள் குழந்தைகளின் வாழ்க்கை நலனை பாதுகாத்திட வேண்டும். என தெரிவித்தார். 

இம்முகாமில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) சோமசுந்தரம் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments