Breaking News

சென்னையில் ஆவடி ஆணையாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் புகார்கள் அலைக்கழிப்பு

 திருவள்ளூர் மாவட்டம் சென்னையில் தொடர்ந்து குற்ற சம்பவங்கள் அதிக அளவில் நடைபெறுவதால் சென்னையை மூன்றாகப் பிரித்து தாம்பரம் காவல் ஆணையரகம் ஆவடி காவல் ஆணையரகம் மற்றும் சென்னை காவல் ஆணையரகமாக பிரித்து புகார்களை உடனுக்குடன் தீர்வு காணவேண்டும் என்பதற்க்காக தமிழகத்தில் முதல் முறையாக பொறுப்பேற்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.

இதனை சரியாக பயன்படுத்தாமல் ஆவடி ஆணையரகம் தற்போது பொது மக்களின் புகார்களை அலைக்கழித்து வருகிறது. காவல்நிலையங்களில் கொடுக்கப்பட்ட புகார்கள் சரியாக விசாரிக்க வில்லை என்பதாலும் புகாரை ஏற்க மறுக்கின்ற காரணத்தினாலும் பொதுமக்கள்  ஆணையாளர் அலுவலகத்துக்கு சென்று புகார்களை வழங்க இருக்கின்றனர் ஆனால் பொதுமக்கள் புகார்களை ஆவடி காவல் ஆணையரகம் புறக்கணிப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றன.

அதுமட்டுமில்லாமல் தற்போது வழக்கறிஞரான ஒருவருக்கு ஏற்பட்ட கொலைவெறித் தாக்குதலால் பாதிக்கப்பட்டு டி9 பட்டாபிராம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகார் அளித்து ஒரு வாரத்திற்கு மேல் ஆகிறது. ஆனால் இதுவரை அவருக்கு சிஎஸ்ஆர் மற்றும் எந்த ஒரு விசாரணையும் நடைபெறவில்லை என்பதை  உடனடியாக அவரும் அவருடைய வழக்கறிஞர்களும் காவல் ஆணையரகத்தில்  புகார் அளித்தனர்.

இந்நிலையில் காவல் ஆணையரகத்தில் புகாரை வாங்க மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் மனமுடைந்த அவர்கள் நீதிமன்றத்தில் வழக்கை தொடர உள்ளனர்

இந்தப் பகுதியில் இருக்கும் காவல்துறையினர் பொதுமக்களை மதித்து மனசாட்சியுடன் நடந்துகொள்ள வேண்டும் என்பதும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை உள்ளது..

No comments

Thank you for your comments