தேர்தல் வேட்புமனு பரிசீலனை துவக்கம்.... கூட்டத்தால் நோய் தொற்று பரவும் அபாயம்
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாநகராட்சி தேர்தல் வேட்புமனு பரிசீலனை துவக்கம்- 100க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் குவிந்துள்ளதால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் மாநகராட்சி, மாங்காடு மற்றும் குன்றத்தூர் நகராட்சி, ஶ்ரீபெரும்புதூர்,உத்திரமேரூர், வாலாஜாபாத் பேரூராட்சிகளுக்கு வருகின்ற பிப்ரவரி 19ந் தேதியன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் மாநகராட்சியில் 51 வார்டுகள், குன்றத்தூர் நகராட்சியில் 30 வார்டுகள், மாங்காடு நகராட்சியில் 27 வார்டுகள், ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் 15 வார்டுகள், வாலாஜாபாத் பேரூராட்சியில் 15 வார்டுகள், உத்திரமேரூர் பேரூராட்சியிள் 18 வார்டுகள் என 156 வார்டுகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.
அதையொட்டி கடந்த 28ம் தேதி முதல் மாநகராட்சி,நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்து வந்த நிலையில் நேற்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவுபெற்றது.
அதையொட்டி காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 156 பதவிகளுக்கு 1001 நபர்கள் போட்டியிட வேட்புமனுகளை தாக்கல் செய்துள்ளனர்.
அதனைதொடர்ந்து இன்றைய தினம் வேட்புமனு பரிசீலனையானது இன்று காலை துவங்கியது.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சி நகர்புற உள்ளாட்சி தேர்தலில் 51வார்டுகளில் போட்டியிட 229 நபர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ள நிலையில் வேட்புமனு பரிசீலனையானது இன்று காலை மாநகராட்சி அலுவலகத்தில் துவங்கியது. அதையொட்டி நுழைவு வாயிலில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
தேர்தல் விதிமுறைகளின்ப் படி வேட்புமனு பரிசீலனையில் பங்கேற்க வேட்பாளர் அல்லது வேட்பாளரை முன்மொழிந்தவர் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
வேப்பு மனு பரிசீலனையில் பங்கேற்க 100க்கும் மேற்பட்டோர் மாநகராட்சி நுழைவு வாயில் முன்பு ஒரே நேரத்தில் குவிந்துள்ளதால் நோய் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
வேட்பாளர்கள் அல்லது வேட்பாளரை முன்மொழிந்தவர் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவதால் மாநகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கும் வேட்பாளரை சார்ந்தவர்களுக்கு இடையேயான கடும் வாக்குவாதங்கள் பரபரப்பான சூழல் நிலைவி வருகிறது.
காஞ்சிபுரத்தில் மாநகராட்சி அலுவலகத்தில் பா.ஜ.க மற்றும் போலீசார் வாக்குவாதத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
No comments
Thank you for your comments