Breaking News

வஉசி உயிரியல் பூங்கா அங்கீகாரம் ரத்து... தமிழக வனத்துறையின் கீழ் பராமரிக்க கடிதம்

கோவை:

கோவை வஉசி உயிரியல் பூங்காவுக்கான அங்கீகாரத்தை மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் சமீபத்தில் ரத்து செய்துள்ளது.

கோவை மாநகராட்சி உயிரியல் பூங்காவை தமிழக வனத்துறையின் கீழ் உள்ள உயிரியல் பூங்கா ஆணையம் மேற்கொள்ள கடிதம் எழுதப்பட்டுள்ளது. கோவை வஉசி உயிரியல் பூங்காவுக்கான அங்கீகாரத்தை மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் சமீபத்தில் ரத்து செய்துள்ளது. 

இதனையடுத்து பூங்கா பராமரிப்பை தமிழக வனத்துறையின் கீழ் உள்ள உயிரியல் பூங்கா ஆணையம் மேற்கொள்ள கடிதம் எழுதப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:

தமிழகத்தில் உயிரியல் பூங்கா ஒன்று மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் பராமரிப்பு செய்யப்படுவது கோவையில் மட்டுமே நடைமுறையில் உள்ளது. உயிரியல் பூங்கா பராமரிப்பு குறித்து மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்துக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் அறிக்கையானது சமர்பிக்கப் பட வேண்டிய அவசியம் உள்ளது. 

இத்தகைய சூழலில் மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றும் அளவுக்கு நிபுணத்துவத்தை மாநகராட்சி பணியாளர்களிடம் எதிர்பார்க்க முடியாது.

அனைத்தையும் ஆலோசித்த பிறகே, வஉசி உயிரியல் பூங்காவின் பராமரிப்பை வருவாய் பகிர்வு அடிப்படையில் ஏற்றுக் கொள்ள தமிழக வனத்துறையின் கீழ் உள்ள உயிரியல் பூங்கா ஆணையத்துக்கு சில தினங்களுக்கு முன் கடிதம் எழுதப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறி னார்.

No comments

Thank you for your comments