Breaking News

காஞ்சிபுரம் மாநகராட்சி திமுக மற்றும் மதச்சாற்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாநகராட்சி திமுக மற்றும் மதச்சாற்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

வருகின்ற பிப்.19ம் தேதி நகர்புற உள்ளிட்சியானது நடைபெறவுள்ளது.வேட்பாளர்கள் அனைவரும் மும்முறமாக வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சி திமுக தலைமையிலான மதச்சாற்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் 51 பேருக்கும் அறிமுக கூட்டமானது காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தினை காஞ்சிபுரம் நகர செயலாளர் சன்பிராண்ட் கே.ஆறுமுகம் வரவேற்புரையாற்றி மகிழ்ந்தார்.இக்கூட்டத்தில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், கழக மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ,மாவட்ட அவைத்தலைவர் சி.வி.எம்.அ.சேகரன்,மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் அளவூர் நாகராஜன்,மதிமுக மாவட்ட செயலாளர் வளையாபதி, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் மாவட்ட தலைவர் அல்லாபாகாஷ்,விசிக மாவட்ட தலைவர் பாசறை செல்வராஜ்,காங்கிரஸ் நகர தலைவர் நாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளரும்-உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினரும்மான க.சுந்தர் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி சிறப்புரையாற்றினார். 

அப்போது பேசிய அவர் வருகின்ற பிப்ரவரி 22ம் தேதி இங்கு வருகை தந்திருக்கும் 51 வேட்பாளர்களும் மாமன்ற உறுப்பினர்கள் என்றும் அவர்களுக்காக உழைத்திட நாங்கள் இருக்கின்றோம் என்றும் அழுத்தம் திறுத்தமாக தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் டி.குமார், பி.எம்.குமார், எஸ்.பி.பூபாலன், க.குமணன், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் கே.ஏ.செங்குட்டுவன், எஸ்.கே.பி.சீனிவாசன், மாநில வர்த்கர் அணி துணை செயலாளர் வி.எஸ்.இராமகிருஷ்ணன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அப்துல் மாலிக், மாவட்ட பிரதிநிதி எம்.எஸ்.சுகுமார், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அபுசாலி,மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் உ.சோபன் குமார், யுவராஜ், பால்ராஜ், முருகன் பட்டு கூட்டடுறவ சங்க தலைவர் ஏ.எஸ்.முத்துசெல்வம், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் செல்வி உள்ளிட்ட திமுகவினர் மற்றும் மமதச்சாற்பற்ற முற்போக்கு கூட்டணியை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

No comments

Thank you for your comments