Breaking News

அங்கக வேளாண்மை பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்...

கோவை:

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நீடித்த வளங்குன்றா அங்கக வேளாண்மைத் துறையில் இணையவழி அங்கக வேளாண்மை பயிற்சி வரும் 07.02.2022 திங்கள்கிழமை அன்று காலை 9.30 – 1.00 மற்றும் 2.00 - 4.30 வரை நடைபெற உள்ளது. 



இப்பயிற்சியில்,  இயற்கை முறையில் பயிர் சத்துக்கள் மேலாண்மை, களை மேலாண்மை, இயற்கை உரம் மற்றும் பூச்சி விரட்டி தயாரித்தல், இயற்கை முறையில் பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு அங்கக சான்றிதழ் பெறும் வழிமுறைகள் மற்றும் பங்கேற்பாளர்களின் உறுதியளிப்புத் திட்டம் போன்ற தலைப்புகளில் பயிற்சி நடைபெற உள்ளது. 

இதற்கான பயிற்சி கட்டணம் ரூ. 590/-, செலுத்தும் வங்கி விவரம் பேராசிரியர் மற்றும் தலைவர். State Bank of India, TNAU Branch - Account Number. 38918523789, IFSC Code - SBIN0002274 மேற்கண்ட வங்கி கணக்கில்  பணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

பயிற்சியின் முடிவில் சான்றிதழ் மற்றும் தொழில்நுட்ப கையேடு தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும். தங்களின் மின்னஞ்சல் மற்றும் முகவரியை பின்கோடுடன் கீழ்க்கண்ட  இத்துறையின் மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

பேராசிரியர் மற்றும் தலைவர் வளங்குன்றா அங்கக வேளாண்மைத்துறை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோயம்புத்தூர் - 641 003.மின்னஞ்சல் : organic@tnau.ac.in - தொலைபேசி: 0422 6611206 / 0422 2455055.

No comments

Thank you for your comments