பாஜக சார்பில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம்
காஞ்சிபுரம், பிப்.6-
காஞ்சிபுரம் மாநகராட்சியில் வரும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான சிறப்பு ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைவர் கே.எஸ்.பாபு தலைமையில் நடைபெற்றது.
காஞ்சிபுரத்தில் வரும் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் 34 வேட்பாளர்களுக்கான சிறப்பு ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைவர் கே.எஸ்.பாபு தலைமையில் நடைபெற்றது.
இதில் மாவட்ட பொதுச் செயலாளர் கூரம் விஸ்வநாதன் முன்னிலையில் மகளிரணி அஞ்சனாதேவி மகளிர் வேட்பாளர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்றார்.
தொடர்ந்து மாவட்ட தலைவர் கே எஸ் பாபு சிறப்புரை ஆற்றும் போது மத்திய அரசின் திட்டங்கள் குறித்து மக்கள் சேகரிக்க வேண்டும். எனவும், பிற்படுத்தப்பட்டோருக்கான மத்திய அரசின் திட்டங்கள் குறித்து விவரமாக பொது மக்களிடம் எடுத்துரைத்து வாக்குகள் சேகரிக்க வேண்டும் எனவும் சிறப்பு ஆலோசனைகளை வழங்கினார் இதில் இருபால் வேட்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments