பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனை
ஈரோடு, பிப்.6-
நகர்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். வேட்பாளர்கள் பிரசாரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
நகர்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி ஈரோடு மாவட்டத்தில் மாநகராட்சியில் 443 வாக்கு சாவடி மையங்களும், 4 நகராட்சிகளில் 153 வாக்குச் சாவடி மையங்கள், 42 பேரூராட்சிகளில் 655 வாக்குச்சாவடி மையங்கள் என மொத்தம் 1251 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளது.
மேலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முறைகேடுகளை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொ ள்ளப்பட்டு வருகிறது. நகர்ப் புற தேர்தல் அட்டவணை வெளியான உடனேயே தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.
வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள், பணம் பட்டு வாடா செய்யப்படுகிறதா? என்பதை கண்காணிக்கும் வகையில் ஈரோடு மாவட்டத்தில் 66 பேர் கொண்ட பறக்கும் படை குழு அமைக்கப்பட்டு சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்.
தற்போது வேட்பாளர்கள் வீடு, வீடாக பிரசாரம் மேற்கொண்டு வரும் சூழ்நிலையில் பறக்கும் படையினர் தங்களது சோதனைகளை மேலும் தீவிரப்படுத்தி வருகின்றனர்.
மாநகராட்சியின் முக்கியமான பகுதிகள், மாவட்டம் முழுவதும் முக்கியமான பகுதிகளில் பறக்கும் படையினர் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். தாங்கள் மேற்கொள்ளும் சோதனைகளை வீடியோவாகவும் பதிவு செய்து வருகின்றனர்.
மேலும் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு செல்லப் படுகிறதா? என்பது குறித்து தீவிரமாக கண்காணித்தனர். வேட்பா ளர்களின் பிரசாரத்தையும் தீவிரமாக பறக்கும் படை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
No comments
Thank you for your comments