கடந்த 10 ஆண்டுகளாக நிதியை ஊழலுக்காக மட்டுமே பயன்படுத்திய ஆட்சி... பிடிஆர்
மதுரை:
நிதியை வைத்து கொண்டு ஊழலுக்காக மட்டும் பயன்படுத்திய ஆட்சி கடந்த 10 ஆண்டுகளாக இருந்தது என நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.
தமிழக நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மதுரை ஆரப்பாளையம் மந்தை திடல் பகுதியில் தேர்தல் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பொதுமக்களின் முன்பாக பேசியதாவது:-
ஒரு தொகுதிக்கு எம்.எல்.ஏ எவ்வளவு முக்கியமோ, அந்த அளவிற்கு முக்கியமானவர் கவுன்சிலர். மதுரை மாநகராட்சி மறு வரையறையில் குளறுபடி உள்ளது. இதை சுட்டிக்காட்டி நீதிமன்றம் சென்று உள்ளேன். அதற்குள்ளாகவே தேர்தல் நடத்தப்படுகிறது. இருப்பினும் இதில் பெண்களுக்கு அதிக அளவில் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது வரவேற்கத்தக்கது.
தமிழக மக்களுக்கும் வரும் நிதிநிலை அறிக்கையில் 8 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு பல்வேறு எதிர்கால வளர்ச்சி குறித்த திட்டங்களை அறிவிக்க உள்ளேன். என்னென்ன திட்டங்களை செயல்படுத்த முடியுமோ அதற்கு ஏதோ ஒரு வகையில் முதல்வர் ஒப்புதல் பெற்று நிதியை ஒதுக்கி கொடுப்பேன்.
ஆனால் நிதி இருந்தால் மட்டும் போதாது. வரும் பட்ஜெட்டில் சில உதாரணங்களை எடுத்து காண்பிக்க உள்ளேன். நிதியை வைத்து கொண்டு ஊழலுக்காக மட்டும் பயன்படுத்திய ஆட்சி கடந்த 10 ஆண்டுகளாக இருந்தது.
இவ்வாறு அவர் பேசினார்.
No comments
Thank you for your comments