Breaking News

'பிஎம் கேர்ஸ்' தணிக்கை அறிக்கை... ராகுல் காந்தி கடும் விமர்சனம்

புதுடெல்லி: 

பிஎம் கேர்ஸ் நிதியை பயன்படுத்தி கொரோனாவின் 2வது அலையின்போது வழங்கப்பட்ட வென்டிலேட்டர்கள் செயல்படவில்லை என்று ராகுல் காந்தி கடும் குற்றம் சாட்டி இருந்தார்.

'பிஎம் கேர்ஸ்' நிதி திட்டத்தின் கீழ்  தன்னார்வலர்கள், வெளிநாட்டினர் என ஏராளமானோர் நிதி வழங்கி வருகின்றனர். கொரோனா பரவல் தொடங்கிய நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு முதல் பிஎம் கேர்ஸ் என்கிற நிதி திட்டம் தொடங்கப்பட்டது. இந்த நிதியில் இருந்து குடிமக்களுக்கான மருத்துவ உதவி மற்றும் அவசரகால சூழ்நிலைகளுக்காக நிவாரணமாக செலவிடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பிஎம் கேர்ஸ் நிதியின் தணிக்கை அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில், பிரதமரின் நிதியில் இருந்து கடந்த இரண்டு ஆண்டுகளில் ரூ.10990 கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளதாகவும், இதில், ரூ.7183 கோடிக்கும் மேல் தன்னார்வளர்களின் பங்களிப்பாகவும், ரூ.494 கோடிக்கும் அதிகமான நிதி வெளிநாட்டினரின் பங்களிப்பாகவும் உள்ளது.

மேலும், இந்த நிதியில் இருந்து கடந்த 2020-21ல் ரூ.3976 கோடி செலவாகியுள்ளதாகவும், நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு மேட் இன் இந்தியாவின் வென்டிலேட்டர்களுக்காக ரூ.1311 கோடி செலவிடப்பட்டுள்ளதாகவும், புலம்பெயர்ந்தோர் நலனுக்காக மாநிலங்களுக்கு ரூ.1000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை விமர்சனம் செய்யும் வகையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 'பிரதமர் ஒரு பொய்க்காரர்' என மேற்கோள் காட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

ஏற்கனவே, பிஎம் கேர்ஸ் நிதியை பயன்படுத்தி கொரோனாவின் 2வது அலையின்போது வழங்கப்பட்ட வென்டிலேட்டர்கள் செயல்படவில்லை என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Thank you for your comments