தேர்தலை நேர்மையுடன் நடத்திட ஒத்துழைக்க வேண்டும்
கோவை, பிப்.16-
கோயம்புத்தூர் மாநகராட்சியின் 100 வார்டுகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல் 2022 முன்னிட்டு ஜி.சி.டி. பொறியியல் கல்லூரில் மண்டல அலுவலர்களுக்கு வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்படவுள்ள வாக்குப் பதிவு இயந்திரங்கள், படிவங்கள். உபகரணங்களை எவ்வாறு வழங்கவேண்டும் என்பது குறித்த பயிற்சி வகுப்பு மாவட்டத்திற்கான தேர்தல் பார்வையாளர் எம்.கோவிந்தராவ் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ராஜ கோபால் சுன்கரா ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
மாவட்டத்திற்கான தேர்தல் பார்வையாளர் தெரிவித்ததாவது, கோயம்புத்தூர் மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு எதிர்வரும் 19.02.2022 அன்று நடைபெற உள்ளது. வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்பட வாக்குப்பதிவு இயந்திரங்கள், படிவங்கள் மற்றும் உபகரணங்களை எவ்வாறு வழங்க வேண்டும். எவ்வாறு திரும்ப பெற வேண்டும் என்பது குறித்த பயிற்சிகள் 315 மண்டல அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவிற்கு முந்தைய நாள் வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்படும். அதனை வாக்குச்சாவடி அலுவலர்கள் பெற்றுக்கொள்வார்கள். பின்னர் வாக்குப்பதிவு முடிவற்ற உடன் மண்டல அலுவலர்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்குச் சாவடிகளுக்கு சென்று பெற்றுக்கொள்வார்கள் மேலும், நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நேர்மையுடனும், வெளிப்படைத் தன்மையுடனும் நடத்திட அனைத்து அலுவலர்களும் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டுமென மாவட்டத் திற்கான தேர்தல் பார்வையாளர் த.எம்.கோவிந்த ராவ் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதனைத்தொடர்ந்து. வாக்கு எண்ணும் மையமான ஜி.சி.டி. பொறியியல் கல்லூரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கும் அறை. தபால் வாக்குகள் எண்ணும் அறை, வேட்பாளரின் முகவர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களின் அறை உள்ளிட்டவற்றை நேரில் பார்வையிட்டு, வாக்கு எண்ணும் மையம் முழுமையாக சி.சி.டி.வி. கேமரா அமைத்து காவலர்கள் பாதுகாப்பில் கொண்டுவரப்பட வேண்டும் எனவும், வாக்கு எண்ணிக்கையின்போது செய்தி சேகரிக்க செல்லும் செய்தியாளர்களுக்கு தனியாக செய்தியாளர் அறை மற்றும் குடிநீர், கழிவறை. மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டுமென கோவை மாவட்டத்திற்கான தேர்தல் பார்வையாளர் எம்.கோவிந்த ராவ் அறிவுறுத்தினார்கள்.
இந்த ஆய்வின்போது, மாநகராட்சி துணை ஆணையாளர் மரு.மோ.ஷர்மிளா மாநகரப் பொறியாளர் (பொ) ராமசாமி, மண்டல உதவி ஆணையாளர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் தேர்தல் பணிகளில் ஈடுபடும் மாநகராட்சி பணியாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
No comments
Thank you for your comments