Breaking News

தேர்தல் அன்று சம்பளத்துடன் விடுமுறை..

கோவை, பிப்.16-

கோவை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ம் தேதி சனிக்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி சென்னை தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் உத்தரவின்படி கூடுதல் தொழிலாளர் ஆணையர் பொன்னுச்சாமி மற்றும் தொழிலாளர் இணை ஆணையர் நீலாவதி அறிவுறுத்தலின் படி மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் அதாவது 1951 பிரிவு 135 படி தேர்தல் நடைபெறும் தினத்தன்று அனைத்து நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் சம்பளத்துடன் விடுமுறை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல் தேர்தல் அனைத்து தொழிலாளர்களுக்கும் விடுப்பு வழங்கப்படுவது தொடர்பாக பெறப்படும் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 

இதுசம்பந்தமாக புகார் தெரிவிக்க கோவை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) வெங்கடேசன் 944539872, கோவை மாநகரில் அப்துல் கபூர் 98430 29910, முருகானந்தம் 8056388846, ராணி லட்சுமிபாய் 9489361802, பெரியநாயக்கன்பாளையம் மற்றும் ஆர்எஸ் புரம் பகுதியில் தீபா பாரதி 994789312, மேட்டுப்பாளையத்தில் செல்லப்பா 9942437022, பொள்ளாச்சியில் வாசுதேவன் 9626440609, ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Thank you for your comments