நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஸ்டெதாஸ்கோப் வழங்கி ஆட்சியர் வாழ்த்து
கோயம்புத்தூர்
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நீட் தேர்வில் வெற்றி பெற்று, மருத்துவக்கல்லூரியில் படிப்பதற்கு இடம் கிடைத்துள்ள மாணவ மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் வாழ்த்துக்களை தெரிவித்து, ஸ்டெதாஸ்கோப் (stethoscope) மற்றும் கோட் (Doctors Coat) ஆகியவற்றை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா கலந்து கொண்டார்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது,
நீட் தேர்வு (National Eligibility cum Entrance Test) என்பது பொது மருத்துவம், பல்மருத்துவம் படிப்பில் சேர்வதற்கு இந்திய அளவில் நடைபெறும் நுழைவுத் தேர்வு ஆகும். கோவை மாவட்டத்தை சேர்ந்த, நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவி எஸ்.சுவேதா (300 மதிப்பெண்)-க்கு சென்னை, ஸ்டான்லி மருத்துவக்கல்லூரியிலும், மாணவர் எம்.யுவராஜ் (279 மதிப்பெண்)-க்கு ஈரோடு, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், மாணவி எஸ்.சுருதி (301 மதிப்பெண்)-க்கு திருப்பூர், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், எஸ்.அபர்ணா (310 மதிப்பெண்)-க்கு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், மாணவி கே.தேவி (253 மதிப்பெண்)-க்கு சேலம், அன்னபூர்ணா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், மாணவர் அப்ரின் ஜெகன்(254 மதிப்பெண்)-க்கு கரூர் மருத்துவக் கல்லூரியிலும், எம்.ஏ.தர்ஷணி(214 மதிப்பெண்)-க்கு திருநெல்வேலி ராஜாஸ் பல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், மாணவி கே.பூர்ணிமா(238 மதிப்பெண்)-க்கு கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், மாணவி கே.சங்கீதா(215 மதிப்பெண்)-க்கு கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், அருனை மருத்துவக்கல்லூரி மதிப்பெண்-க்கு திருவண்ணமலை மருத்துவ படிப்பு பயில்வதற்கு இடம் கிடைத்துள்ளது.
மருத்துவமனையிலும், நன்றாக அனைவரும் மருத்துவப்படிப்பினை பயின்று இவர்கள் சிறந்த மருத்துவர்களாக வரவேண்டும். மேலும், வருங்காலத்தில் மருத்துவத்துறையில் பொதுமக்களுக்கு சமூகசேவை செய்யவேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தார்.
No comments
Thank you for your comments